சொக்கி
ப்ளேடு கொஞ்சமாகத் துருவேறியிருப்பது தெரிந்தும் கன்னத்தில் சுருண்டுவிட்ட மயிர்களைக்களைய அழுத்தியது தவறுதான் வேறு வழியில்லை. இன்று சனிக்கிழமை பரபரப்பான நாள் விடுதிக்கு நிறைய ஆண்களும் பெண்களும் அலைமோதியபடி அவிழ்த்துவிடப்பட்ட மந்தைகளைப்போல் முந்தியடித்துக்கொண்டு வருவார்கள். சென்ற மாதம் ஒரு சனிக்கிழமையில் சோடியம் விளக்கொளியில் ஆடை நழுவுவதைக்கூடக் கவனிக்காத பெண்ணொருத்தி அவனது மேலதிகாரியிடம் மழிக்காத தாடியைக்குறித்து நுனிநாக்கில் ஆங்கிலக் குற்றச்சாட்டு உரை பொழிந்தாள். அவரும் தனது எக்கிக்கொண்ட தொப்பை மீது சத்தியமாக விரைவில்
Read More