Author: பாலைவன லாந்தர்

கலைசினிமா

ஊரடங்கு ( ஐந்தாம் ஆண்டு)

ஊரடங்கு வட சென்னையின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திற்குப் பிறகான நிறம் எப்படி இருக்குமென தெரியுமா? 1985ல் எங்கள் வீட்டினருகேயே ஒரு கடை புதிதாக திறக்கப்பட்டது. அது விசிஆர் என்று அழைக்கப்படும் வீடியோ கேசட் ரெகார்டரை வாடகைக்கு கொடுக்கும் ஒரு கடை. அதுவரை சனிக்கிழமை ஹிந்தி படங்களையும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் படங்களையும் மட்டுமே காணக் கிடைத்த எங்களுக்கு ( அடிக்கடி அப்பா சினிமாவுக்கு அழைத்துச் செல்வார் அது தனி விஷயம்)

Read More
இலக்கியம்கட்டுரைகள்கலை

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்?

கரிகாலன் கையிலுள்ள தீபத்தை அடுத்து ஏந்தப் போவது யார்? தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் இடையே பாலமாக இன்றளவும் இருந்து வருபவர்கள் விமர்சகர்களே என்றால் அது மிகையல்ல. கலை அது எந்த வடிவமாக இருந்தாலும் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு வழி தேவைப்படுகிறது. வழி நேர்வழியாக அமைந்து விடுதல் சிறப்பானது. தனக்குத் தானே “எக்ஸிட்” எழுதிக்கொண்ட பிறகு முன்னைவிட முழுவீச்சில் இலக்கியத்தில் “எண்ட்ரி” கொடுத்திருக்கும் கரிகாலன் அவர்களைக்

Read More
கட்டுரைகள்

காதலே காதலே தனிப்பெரும் துணையே..

காதலே காதலே தனிப்பெரும் துணையே அன்னிக்கு விடிஞ்சதே அவர்களைப் பார்க்கத்தான் என்று நினைக்கத் தோன்றியது. ”வந்துப்போன” என்ற வார்த்தை சிலருக்கு சாதாரணமாக வந்துப் போவதில்லை. பயணங்களில் எத்தனையோ நபர்களைச் சந்தித்திருக்கிறோம் சில முகங்கள் பிடித்தமான யாருடைய முகத்தையோ போர்த்திக் கொண்டு சிறிய பயணத்தை பெரும் போராட்டமாகவும் ஆக்கி விடுகின்றன. முகமென்றால் முகமே தானாகண்கள்உதடுஉயரம் அட கட்டம் போட்டச் சட்டைகோடு போட்ட சட்டை அன்னிக்கு அப்படித்தான் அவன் நான் சிறுவயதில் பழகிய

Read More
இலக்கியம்கட்டுரைகள்

இரவாடிய திருமேனி

இரவாடிய திருமேனி வேல்முருகன் இளங்கோவின் இரண்டாவது நாவல். இந்த புத்தகக்காட்சியில் வாங்கிய நூல்களில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய சில நூல்களுள் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஏழு நாட்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து முடித்தேன். அடர்த்தியான மொழி விட்ட இடத்திலிருந்து தொடங்கவிடாமல் முந்தைய பக்கத்தையும் மேய்ந்து பின் தொடர வைத்தது. கள்வர்களைக் குறித்த சில கதைகளை வாசித்திருந்தாலும் சாம்பனின் களவும் வாழ்வும் சில தர்மங்களோடு இழையோடிப் போகிறது. சுருளி, சங்கன் இருவரின்

Read More
கட்டுரைகள்கலை

ஐ ட்வெண்டி கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு

  ஐ 20 கார் மற்றும் அவிழ்ந்திடாத கயிறு இந்த ப்ளாக் தொடங்கியவுடன் முதலில் இந்தக் கட்டுரையைத்தான் பதிய வேண்டுமென காத்திருந்தப் பகிர்வு.. எங்களிடம் ஒரு கார் இருந்தது. வைக்கம் பஷீரின் கதையிலுள்ள யானையைப் போன்ற கார். மெட்டாலிக் க்ரே வண்ணத்தில் வேண்டுமென்று அடம் பிடித்து ஆர்டர் செய்து காரின் சாவியை வாங்கிக்கொண்ட நாள் இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. என் பெரியப்பாவிடம் ஓர் அம்பாஸிடர் கார் இருந்தது. அப்போது எனக்கு

Read More
சிறுகதைகள்

சொக்கி

ப்ளேடு கொஞ்சமாகத் துருவேறியிருப்பது தெரிந்தும் கன்னத்தில் சுருண்டுவிட்ட மயிர்களைக்களைய அழுத்தியது தவறுதான் வேறு வழியில்லை. இன்று சனிக்கிழமை பரபரப்பான நாள் விடுதிக்கு நிறைய ஆண்களும் பெண்களும் அலைமோதியபடி அவிழ்த்துவிடப்பட்ட மந்தைகளைப்போல் முந்தியடித்துக்கொண்டு வருவார்கள். சென்ற மாதம் ஒரு சனிக்கிழமையில் சோடியம் விளக்கொளியில் ஆடை நழுவுவதைக்கூடக் கவனிக்காத பெண்ணொருத்தி அவனது மேலதிகாரியிடம் மழிக்காத தாடியைக்குறித்து நுனிநாக்கில் ஆங்கிலக் குற்றச்சாட்டு உரை பொழிந்தாள். அவரும் தனது எக்கிக்கொண்ட தொப்பை மீது சத்தியமாக  விரைவில்

Read More