மூன்று கவிதைகள்
நட்சத்திரங்களற்ற இரவு காற்று அழைக்கிறது மூன்றாம் இரவில் இலை விழும் சப்தத்திற்கு தெருவிளக்கினடியில் பூனைகள் புரண்டு படுக்கின்றன மாபெரும் அலையின்மீது மீச்சிறு அலை தவ்விக்கொண்டு கரையைத் தொடச்செல்கிறது நத்தைக்கூட்டின் வெளியே நீட்டிக்கொள்ளும் தலையில் எறும்புகள் நங்கென குட்டிச்செல்கின்றன. நீ சொல் இங்கே உன் பெயரென்ன இருளைக் கிழித்துச்செல்லும் புகைவண்டிக்குள் ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து யாரோ ஒரு சிறுமி யாரோ ஒரு சிறுமியைத் தேடுகிறாள் நெளியும் நிழல் உடனிருக்க நீ